உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி சேலன்ஜ்: விண்வெளியில் முதல் படப்பிடிப்பு

தி சேலன்ஜ்: விண்வெளியில் முதல் படப்பிடிப்பு

விண்வெளியில் நடக்கும் கதைகளாக ஏராளமான ஹாலிவுட் படங்கள் வந்தது. தமிழில்கூட ஜெயம்ரவி நடித்த டிக் டிக் டிக் விண்வெளி கதை. ஸ்டார் வார்ஸ் வரிசை படங்கள் அனைத்தும் விண்வெளி கதைகள்தான். ஆனால் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விண்வெளி போன்ற ஷெட் அமைத்து படமாக்கப்பட்டது.

முதன் முறையாக ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ் தான் தற்போது நடித்து வரும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார். இதற்காக நாசாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொன்னார். ஆனால் அதற்கு முன்பாக தி சேலன்ஜ் என்கிற படத்தின் படப்பிடிப்பு விண்வெளியில் நடக்க இருக்கிறது. இதற்காக அந்த பட நிறுவனம் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

விண்வெளியில் இருப்பதற்கான பயிற்சியை படத்தின் நடிகை யூலியா பெரிசில்ட் , இயக்குநர் ஷிபென்கோ ஆகியோர் எடுத்து வருகிறார்கள். இவர்கள் கசகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர்.

மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் இப்பயணத்துக்கு தலைமை தாங்குகிறார்.அவர்கள் மூவரும் சோயுஸ் எம் எஸ்-19 விண்கலத்தில் 12 நாள் பயணமாக செல்ல உள்ளனர். அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

விண்வெளி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் விண்வெளிக்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் தி சேலன்ஞ் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !