மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1434 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1434 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1434 days ago
வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகி சின்னத்திரையால் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த வந்த ரம்யாவுக்கு ஆரம்ப காலக்கட்டங்களில் சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் திரும்பிய ரம்யா, விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என இரண்டு சூப்பர் ஹிட்டான ஷோக்களில் கலந்து கொண்டார். இந்த இரண்டு ஷோக்களுமே ரம்யா பாண்டியனின் பெயரை இன்றளவும் சொல்லும் அளவிற்கு பிரபலமும் ஆனார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் டிவியில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரம்யா, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெஸ்ட். எனக்கு ரொம்ப பிடிக்கும். காமெடியாக ஜாலியாக இருக்கும். ரசிகர்களிடமிருந்து வெறுப்பும் வராது' என கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன், இறுதியில் ரசிகர்களிடம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். சக போட்டியாளர்கள் கூட ரம்யாவுக்கு விஷ பாட்டில் என பெயர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
1434 days ago
1434 days ago
1434 days ago