மேலும் செய்திகள்
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1434 days ago
பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல்
1434 days ago
அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர்
1434 days ago
'சிந்து சமவெளி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். அதன்பிறகு மைனா, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி - 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார். இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், குடி யெடமைதே என்ற வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் எடுத்த வீடியோவை நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
1434 days ago
1434 days ago
1434 days ago