நடிகை ராஷி கண்ணா கடந்த 2013ல் வெளியான 'மெட்ராஸ் கபே' எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழ் திரையுலககுக்கு வந்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின்சில கேள்விகளுக்கு பதிலளித்த ராஷி கண்ணா தனது விருப்பமான நடிகர் மற்றும் நடிகை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார், கோலிவுட்டில் இருந்து தனக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை யார் என்று ஒரு ரசிகர் கேட்டபோது,விஜய் மற்றும் நயன்தாரா என்று பதிலளித்தார். அவரது தாய் மொழி இந்தி என்றாலும், தனக்கு ஐந்து மொழிகள் தெரியும்என்றும் கூறினார்.
உங்களுடைய பாய் பிரெண்ட் பெயர் என்ன என்று ஒரு ரசிகர் கேட்டபோது, எனக்கு ஒரு பாய் பிரெண்ட்டும் இல்லை. அப்படி அமையும் போது, நான் நிச்சயமாக சொல்வேன் என்று சாமர்த்தியமாக பதில் அளித்தார்.