மேலும் செய்திகள்
'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி
1451 days ago
‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்!
1451 days ago
இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை
1451 days ago
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்டர்'. இப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்திற்கான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியா வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகஸ்தர்களின் தொகைக்கு தியேட்டர்காரர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால், படத்திற்கான முன்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமான நிலையில் இந்த ஏரியாக்களில் இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை.
சென்னை ஏரியாவில் இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. படத்திற்கு அதிக விலை சொல்வதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சரிவர வசூல் செய்யாத காரணத்தால் தியேட்டர்காரர்கள் தரப்பில் விலையைக் குறைத்துக் கேட்பதாகவும் சொல்கிறார்கள். இன்று மாலைக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் எனத் தெரிகிறது. அதன்பிறகுதான் முன்பதிவு ஆரம்பமாகுமாம்.
1451 days ago
1451 days ago
1451 days ago