உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் சிவகார்த்திகேயன்

தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் சிவகார்த்திகேயன்

டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் முதன்முதலாக தெலுங்கில் நடிக்கும் படத்தை அனுதீப் கே.வி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக தெலுங்கு கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது தீவிரமாக தெலுங்கு பேச பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !