சுந்தர்.சிக்கு விநாயகர் சிலையை பரிசாக கொடுத்த யோகிபாபு
ADDED : 1462 days ago
தற்போதைய முன்னணி காமெடியனான யோகிபாபு தீவிரமான ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் அங்குள்ள முருகன் கோயில்களை தேடிச் சென்று சாமிதரிசனம் செய்கிறார்.
அதோடு, தனது சொந்த ஊரில் வராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ள யோகிபாபு, குடும்பத்துடன் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தநிலையில், கலகலப்பு-2 படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர்.சிக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.