உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ருதிஹாசன் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்

ஸ்ருதிஹாசன் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தனது திறமையால் படிபடியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். நடிப்பு, நடனம், பாடகி என பன்முக திறமைக்கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.

இதற்கிடையே தனது சமீபத்திய பதிவில், ஸ்ருதி ஹாசன் தனது முதுகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் முதுகில் 'ஷ்ருதி' என எழுதப்பட்டுள்ளது. அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர், என் பெயரைச் சொல்லுங்கள்-சத்தமாகச் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கமெண்ட் பகுதியை தங்களது அன்பால் நிரப்பி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !