பிரேக் எடுக்காமல் நடிக்க மகேஷ்பாபு முடிவு
ADDED : 1457 days ago
சர்காரு வாரிபாட்டா படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படம் சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. தற்போது ஸ்பெயினில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. அதையடுத்து நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து திரி விக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார்.
எப்போதுமே ஒரு படத்தில் நடித்து முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார் மகேஷ்பாபு. ஆனால் கொரோனா தொற்று காரணமாக சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பு அதிகம் காலம் நீடித்து விட்டதோடு, தனக்காக பல மாதங்களாக திரிவிக்ரம் காத்துக் கொண்டிருப்பதால் உடனடியாக அடுத்த படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.