சத்யஜோதி பிலிம்ஸ் படத்தில் ஹிப்ஹாப் ஆதி!
ADDED : 1458 days ago
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என்று வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. மீசையை முறுக்கு படத்தை அடுத்து சிவகுமாரின் சபதம் படத்தையும் இயக்கி நடித்திருந்தவர், தற்போது அன்பறிவு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அடுத்தபடியாக மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவண் இயக்கும் படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கப்போகிறார். பேண்டஸி கதையில் உருவாகும் அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இதுவரை ஆதி நடித்த படங்களில் இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.