25 கோடி வசூலைக் கடந்த 'டாக்டர்'
ADDED : 1463 days ago
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'டாக்டர்'.
கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்களுக்கு மக்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படியான படங்கள் வெளிவரவில்லை. ஆனால், 'டாக்டர்' படத்திற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வருவதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ந்துள்ளனர்.
பொதுவாக விடுமுறை நாட்களில்தான் படங்களின் வசூல் நன்றாக இருக்கும். வார முதல் நாட்களில் பெரிய வசூல் இருக்காது. அதை 'டாக்டர்' படத்தின் வசூல் நேற்று மாற்றியிருக்கிறது. நேற்று திங்கள் கிழமை காலை காட்சிக்குக் கூட நல்ல கூட்டம் வந்ததாகச் சொல்கிறார்கள்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படத்தின் வசூல் 25 கோடியைக் கடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் தெம்பைக் கொடுத்துள்ளது.
இத்தனைக்கும் 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன் சிரிக்கவே வைக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் படத்திற்கு சினிமா பிரபலங்கள் கொடுத்த ஆதரவும், அவர்கள் செய்த பிரமோஷனும்தான் இந்த வசூலுக்குக் காரணம் என்கிறார்கள்.