உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா

அய்யப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி: பாரதிபுரத்தில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நாளை மறுநாள் துவங்குகிறது. கோவிந்தசாலை என்றழைக்கப்படும் பாரதிபுரத்தில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழா, கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் (17ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவில், தினசரி காலை 5:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம், 25 கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம், சந்தன அபிஷேகம், ஸ்ரீபுதபலி, மாலையில், சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.வரும் 21ம் தேதி மாலை 7:00 மணிக்கு, பள்ளிவேட்டை உற்சவம், 22ம் தேதி காலை 9:30 மணிக்கு, வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் சுவாமிக்கு ஆராட்டு உற்சவம், 23ம் தேதி காலை 9:30 மணிக்கு, 108 கலசாபிஷேகம், சந்தன அபிபேஷகம் நடக்கிறது. அன்றைய தினம் மாலையில் சிறப்பு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகளும், புதுவை அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகளும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !