உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை

இந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். கேதுவால் எதிரி தொல்லை வந்தாலும் அதை சூரியன், குரு முறியடிப்பார்கள். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.

வெளியில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும் வீட்டில் நிம்மதி பெருமூச்சு விடலாம். கடந்த மாதம் குடும்பத்தில் எண்ணற்ற பல பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவும் பிரிவும் ஏற்பட்டு இருக்கக்கூடும். இதற்கு காரணம் புதன் 5ம் இடத்தில் இருப்பதே. அவர் டிச. 3ல் இடம் மாறுவதால் பிரச்னை மறையும். குடும்பத்தில் முழு அமைதி ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.. பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும்  பெறுவர். முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. டிச.2 க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். ஆரோக்கியம் மேம்படும்.  பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்:

தொழிலதிபர்கள் கடந்த காலத்தில் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கி இருக்கலாம். அவர்களின் பிடியில் இருந்து டிச.2 க்கு பிறகு விடுபடுவர்.
வியாபாரிகளுக்கு எதிரியால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் மறையும். லாபம் அதிகமாக கிடைக்கும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
ஐ.டி., துறையினருக்கு டிச.2க்கு பிறகு எதிர்பாராத நன்மை சேரும்.  
மருத்துவர்களில் பணியில் பரபரப்பாக ஈடுபடுவர். வருமானத்திற்கு பஞ்சமில்லை.
வக்கீல்களுக்கு டிச.2 க்கு பிறகு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
ஆசிரியர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.
விவசாயிகள் பாசிப்பயறு, நெல், சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் காண்பர்.  
பள்ளி மாணவர்கள் டிச. 2க்கு பிறகு படிப்பில் சிறந்து விளங்குவர். புதன் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் காண்பர்.  
கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனையும், அறிவுரையும் கிடைக்கும். கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
 
சுமாரான பலன்கள்:

தொழிலதிபர்கள், தீயோர் நட்பால் பண இழப்பு, நஷ்டத்தை சந்திக்க நேரும். எனவே விழிப்புடன் செயல்படவும்.
வியாபாரிகள் மறைமுக எதிரிகளால் அவ்வப்போது இடையூறு வரலாம்.
அரசு வேலையில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.  
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மாத முற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும்.
போலீஸ், ராணுவத்தினர் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
அரசியல்வாதிகள் பயணத்தால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகலாம்.
கலைஞர்களுக்கு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க நேரிடும்.
விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம்.

* நல்ல நாள்: நவ.17,20,21, 26,27,28,29,30  டிச. 6,7,8,9,10,13,14
* கவன நாள்:  டிச. 1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9  
* நிறம்: சிவப்பு, மஞ்சள்

* பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
●  வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை தீபம்
●  பவுர்ணமி மாலையில் அம்மனுக்கு அர்ச்சனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !