உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை

இந்த மாதம் சுக்கிரன், குருவின் நற்பலன்கள் தொடரும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாரான நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் குருவால் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.

உங்கள் முயற்சிகளில் தடைகள் பல வரலாம். அதை வெற்றிகரமாக செய்து முடிக்க பெண்கள் வசம் உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். அவப்பெயர் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். நவம்பர் 22-ம் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் இருக்கும்.மதிப்பு, மரியாதை கூடும். அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும்.

பெண்கள்: கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உடல்நலம்: உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.   

சிறப்பான பலன்கள்:

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நவம்பர் 22ம் தேதிக்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். ஆசிரியர்கள் மாணவர்களால் பெருமை அடைவர். சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு காண்பர்.  அரசு வேலையில் இருப்பவர்கள் நவம்பர் 22-ம் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காணலாம்.கோரிக்கைகள் நிறைவேறும்.


வியாபாரிகளுக்கு பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும் நவம்பர் 22-ம் தேதிக்கு பிறகு  அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தரகு, கமிஷன் தொழில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை காண்பர்.புதிய பதவி தேடி வரும். 22ம் தேதிக்கு பிறகு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.


கலைஞர்கள் பெண்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர்.  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் மஞ்சள் நெல், சோளம்,  காய்கறி,  பழவகைள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். கல்லூரி மாணவர்கள் ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.

சுமாரான பலன்கள்:

நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  

ஐ.டி. துறையினர்கள் வேலையில் பளுவும் அலைச்சலும் இருந்தாலும் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். மருத்துவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.


வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் கவனம் தேவை. முடிவு சுமாராக இருக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் அதிபர்களுக்கு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.

* நல்ல நாள்: நவ.20,21, 22,23,26,27, டிச.1,2,8,9,10,11,12
* கவன நாள்: நவ.17, டிச.13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண் :  2,3
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !