வத்தலக்குண்டு கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :2265 days ago
வலத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு அக்காண்டீஸ்வரி, பொன்னர், சங்கர், அருக்காணி தங்காள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (நவம்., 15ல்) நடந்தது.
மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் முதல் நாள் யாக பூஜை துவங்கியது. நவக்கிரக, லட்சுமி, கணபதி ஹோமங்கள், முதல் கால பூஜை நடந்தது. நேற்று முன் தினம் (நவம்., 14ல்) 2, 3ம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று (நவம்., 15ல்) காலை 4ம் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடந்தன.
காலை 9:45 மணியளவில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மீனாட்சி கோயில் நிர்வாக ஸ்தானீகம் ஆனந்த் பட்டர் நடத்தினார். கோபுர வேலைப் பாடுகளை குமர குருபரன், கவுரிசங்கர் செய்திருந்தனர்.