மோகனூர் மாரியம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு
ADDED :2264 days ago
மோகனூர்: மாரியம்மன் சுவாமிக்கு, புதிய வெள்ளிக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மோகனூரில், நாவலடியான், காளியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அம்மனுக்கு, புதிதாக, 7.50 கிலோ வெள்ளி கவசம் அணிவிக்க, பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்ததையடுத்து, நேற்று, வெள்ளிக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, சிறப்பு யாகம், அபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, சுவாமிக்கு, வெள்ளிக் கவசம் அணிவித்தும், மலர் அலங்காரம் செய்தும், பூஜைகள் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்தனர்.