உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி நூல்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி நூல்

திருப்பதி: திருமலை, ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் நூல் இருந் ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐதராபாதின் மல்காஜிகிரி விஷ்ணுபுரியைச் சேர்ந்த பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு  முன், திருமலையில், ஏழுமலையானை தரிசித்து, லட்டு பிரசாதம் வாங்கி, வீடு திரும்பினர். லட்டை உண்பதற்காக உடைத்தபோது, அதில் தலைமுடி மற்றும் நூல் இருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் திருமலையில், மிகவும் பாதுகாப்பான முறையில்  லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் கூறிக் கொள்கிறது. ஆனால்,  அதை மீறி, லட்டில், முடிமற்றும் நூல் போன்றவை இருப்பது, பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி
இருக்கிறது.

இதையடுத்து, அந்த பக்தர்கள், ‘லட்டின் சுகாதாரத்துக்கு பொறுப்பானவர்கள் மீது  கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தேவஸ்தானத்திடம் புகார்  அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !