உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் தாலுகா பருக்கைக்குடி கிராமத்தில் சூலக்கரை  காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நவ.,14 காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை,  விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், கடல்தானம், முதல் கால யாக  பூஜை நடந்தது.நேற்று (நவம்., 15ல்) காலை 6:00 மணிக்கு கிருஷ்ண சுப்ரப்தம்,விக்னேஸ்வர் பூஜை, நவக்கிரஹஹோமம், லெட்சுமி நாடி சந்தனம்,பூர்ணஹூதி,இரண்டாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது.

பின் நேற்று (நவம்., 15ல்) காலை 9:00 மணிக்கு கோமாதா பூஜை  நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர்  ஊற்றப்பட்டது.அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.பின்  பொது அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !