செல்வ விநாயகர் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2181 days ago
வீரபாண்டி: கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, வெள்ளையகவுண்டனூர், செல்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று காலை, கணபதி பூஜையுடன் கும்பாபி?ஷக விழா தொடங்கியது. மாலை, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலி லிருந்து, திரளான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து, விநாயகர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, முளைப்பாரி, பாலிகை, புனிதநீர் தீர்த்தத்தால், விநாயகருக்கு அபி?ஷகம் செய்து வழிபட்டனர். இன்று காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள், கும்பாபி?ஷகம் நடக்கிறது.