வெள்ளகோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம்
ADDED :2180 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அம்மையப்பர் திருக்கல்யாணப் பெருவிழா நேற்று நடந்தது.வெள்ளகோவில் தெய்வநாயகி உடனமர் சோளீஸ்வரர் திருக்கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடந்தது. முன்னதாக மாலை 4 மணி அளவில் வீரக்குமார் கோவில் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பன்னிரண்டு திருமுறைகளும், சீர்தட்டும், பூத்தட்டும் சோளீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யாக பூஜைகளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. அம்மையப்பர் திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடந்தது. மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.