கார்த்திகை சோமவாரம்: பக்தர்கள் 108 முறை வலம்
ADDED :2401 days ago
சிதம்பரம் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, நடராஜர் சன்னதி பொன்னம்பலத்தை வலம் வந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து, வேண்டுதல் நிறைவேற 108 முறை பொன்னம்பலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வந்த பின், சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோமவாரத்தையொட்டி நடராஜர் கோவிலில் நேற்று காலை முதல் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.