ஐயப்ப விரதத்தில் கடுமை ஏன்?
ADDED :2171 days ago
மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை திரிகரணசுத்தி என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை வைப்பது கூடாது. பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதியில், பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.