உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையான நட்பு

உண்மையான நட்பு

ஒருமுறை நாயகத்தின் தோழர் குபைப் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார்.  அவரைக் கழுமரத்தில் ஏற்ற முடிவு செய்தனர். குபைப் அதனருகில் கொண்டு  வரப்பட்டார். அப்போது எதிரிகளின் தலைவன், ""நான் சொல்வதை திரும்பச்  சொல். உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்” என்றான். பதில் ஏதும் சொல்லாமல்  அமைதி காத்தார் குபைப். ""இந்த கழுமரத்தில் எனக்கு பதிலாக முகம்மது(நாயகம்) இருப்பதை  விரும்புகிறேன் என்று சொன்னால் உன்னை விடுவிக்கிறேன்” என்றான்  தலைவன். ""என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவருக்கானது. என்னை கழுமரத்தில்  ஏற்றினாலும் கவலையில்லை” என குபைப் ஆவேசப்பட்டார். இது தான் உண்மையான நட்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !