உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்

பழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்

பழநி: பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேகப்பணிகள் தற்போது நடைபெற துவங்கியுள்ளது. இந்தநிலையில் முதற்கட்டப்பணியாக மலைக்கோயிலில் பாலாலய பூஜை வருகிற டிச., 2 ல் காலை 9:45 முதல் 10:30க்குள் நடைபெற உள்ளது. இத்தகவலை கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீண்டும் ரோப்கார் சேவை:
பழநி மலைக்கோயிலில் உள்ள ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த நவ.,15 முதல் 19 வரை நடந்தது. நேற்று சோதனை ஓட்டத்திற்கு பிறகு மாலை 4:00 மணி முதல் பக்தர்களுக்கான சேவை தொடங்கியது என்று கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !