தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :2180 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் குரு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. தட்சணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, உலக நலன் வேண்டி அர்ச்சனை நடந்தது. பக்தர்கள் நெய்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவில் அர்ச்சகர் கார்த்திகேயன் குரு பூஜைகளை செய்து வைத்தார்.