1000 இதழ் மலருடன் சபரிமலை வந்த பக்தர்
ADDED :2233 days ago
சபரிமலை, கேரள மாநிலம் கொட்டாரக்கரை கோட்டைக்ககத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ் நாராயணன். நேற்று இவர் இருமுடி கட்டுடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்தரதளம் பூ கொண்டு வந்தார். மிக அபூர்வமான இந்த பூவை ஐயப்பன் சன்னதியில் சமர்ப்பித்து வணங்கி சென்றார். பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் பூவை ஆர்வமுடன் பார்த்தனர்.