கிருஷ்ணராயபுரம் பிடாரியம்மன் கோவில் சாலையில் செடிகள் அகற்றும் பணி தீவிரம்
ADDED :2178 days ago
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம், பிடாரியம்மன் கோவில் சாலை பராமரிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பகுதியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் செல்லும் சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வந்தன. விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர் கள், சாலையோரம் வளர்ந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலை பகுதி முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்பட்டது.