ஓசூர் அருகே, நவநாகம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2179 days ago
ஓசூர்: ஓசூர் அருகே, நவநாகம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம் நேற்று (நவம்., 22ல்) நடந்தது. ஓசூர் அடுத்த, ஜீமங்கலத்தில், நவநாகம்மா தேவி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (நவம்., 21ல்) துவங்கியது. அன்று மாலை, 6:00 மணிக்கு, மஹா கணபதி மூலதேவதை பிரார்த்தனை, கங்கா பூஜை உட்பட பல்வேறு நிகழ்ச் சிகள் நடந்தன. விழாவில், நேற்று காலை, 7:30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.