உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரசார ரதயாத்திரை

உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரசார ரதயாத்திரை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டைக்கு சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வந்த ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரைக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.

சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை சென்னையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து கேரளா சென்றடைகிறது.. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இந்த ரதயாத்திரை சுற்றுப்பயணம் நடக்கிறது. அதன் முதற்கட்டமாக கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் கடந்த 11ம் தேதி இந்த ரதயாத்திரை துவங்கியது. வரும் 7ம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சென்றடைகிறது . கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு நேற்று வந்த ரத யாத்திரைக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் மாநில பொதுச்செயலாளர் சிவராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் உடன் வந்திருந்தனர். இந்த ரத யாத்திரையை உளுந்தூர்பேட்டையில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் நிர்வாகிகளான குணசேகரன், ராமசாமி அய்யர், முத்துகிருஷ்ணன், சீனு, கோபி, கோதண்டபாணி உள்ளிட்ட பலர் வரவேற்று தீபாரதனை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !