உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்

புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்

புட்டபர்த்தி: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் 94வது பிறந்த நாள் விழா விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் திரண்டு வந்து அவரது மகா சமாதி முன் நின்று ஆசி பெற்றனர்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படம் தங்கரதத்தில் வைத்து கொண்டு வரப்பட்டது. பாபாவிற்கு சிறப்பு வழிபாடு, இசைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அவரது மகா சமாதி முன் நின்று ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !