திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED :2227 days ago
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு, ’சீல்’ வைக்கப்பட்டன.திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, நல்லதம்பி தெருவில் குடியிருப்புகள் உள்ளன.அவற்றில் குடியிருப் போர் பல ஆண்டுகளாக, வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, போலீசார் உதவியுடன் அகற்றி, அறநிலையத் துறை சார்பில், ’சீல்’ வைக்கப்பட்டன.இதில், இருவர் வாடகை தொகையில் ஒரு பகுதியை செலுத்தி, கமிஷனரிடம் முறையிட்டனர். அவர்கள் குடியிருப்பு, ’சீல்’ அகற்றப் பட்டது.