உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்

மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்

1926 நவ.23ல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா அவதரித்தார். 2011  ஏப்.24ல் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆஸ்ரமத்தில் உடல்  அடக்கம் செய்யப்பட்டது.* பொறுமை மிக்கவர் வாழ்வில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் அவர்களின்  முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். அதுவே வாழ்வின் இன்பமாகும்.* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில்  தற்பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.* கருணையுள்ளவர்கள் மட்டுமே பிறர் மீது அன்பு செலுத்துவர். சாதிக்க  முடியாததையும் பொறுமை சாதிக்கும்.   * பிறர் பாராட்டும் போது பெருமிதமோ, திட்டும் போது வருத்தமோ  கொள்ளாதீர்கள்.* பக்தியில் ஈடுபடும் போது தான் சமுதாயம் முழுமை பெறும். * இளமைக்காலம் என்பது முக்கிய காலகட்டம். அதை நல்வழிப்படுத்துவதில்  பெரும் பங்கு, பெற்றோரைச் சேரும்.* ஓய்வு நேரத்தை தியானம் செய்யவும், சேவை செய்யவும் பயன்படுத்துங்கள். * எதிர்பார்ப்பும், பேராசையும் பெருந்துன்பம் தரும்.* செய்யும் நற்செயல், தீயசெயல்களுக்கான பலன் எதிர்காலத்தில் நம்மை  வந்தடையும். * உடலுக்கு உணவு சக்தி தருவது போல தனிமனித அமைதியே உலகிற்கு சக்தி  தருகிறது.* உயிர்களின் பசிப்பிணியை போக்குவது நம் கடமை. * மனிதநேயம் கொண்டவர் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடியிருக்கும்.* மனிதராகப் பிறந்ததே பக்தியின் மூலம் கடவுளை அடையத் தான்.* சேவை மூலம் அன்பு வெளிப்படுவதோடு அது எங்கும் பரவுகிறது. - சொல்கிறார் சாய்பாபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !