பேரம்பாக்கம் பெருமாள் கோவிலில் கருட சேவை
ADDED :4922 days ago
பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் கருட சேவை கோலாகலமாக நடந்தது. பேரம்பாக்கம் கமலவல்லி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவிலின், 11ம் ஆண்டு பிரமோற்சவ விழா, 12ம் தேதி காலை 8 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாளான நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி உற்சவர் வைகுண்ட பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். இன்று காலை, 9 மணிக்கு தேர்த் திருவிழா நடைபெறுகிறது.