உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு நியமனம்

இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு நியமனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்,  1,140 கோவில்கள் உள்ளன. இவற்றில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்  குழு நிர்வாகிகள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகின்றனர்.  

இதன்படி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஈரோட்டில், இந்து சமய  அறநிலையத்துறையின் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த விழாவில்,  உதவி ஆணையாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள்  ராமலிங்கம் தென்னரசு, பதவி பிரமாணம் செய்து வைத்தனர். மாவட்ட  அறங்காவலர் குழு தலைவராக ஜெகதீசன், உறுப்பினர்களாக பிரேமா,  ஈஸ்வரமூர்த்தி, தேவராஜ், ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !