சேலத்தில் கார்த்திகை அமாவாசை முன்னோர்க்கு வழிபாடு
ADDED :2174 days ago
சேலம்: கார்த்திகை அமாவாசையில், ஏராளமானார், முன்னோர் வழிபாடு நடத்தினர். கார்த்திகை மாத அமாவாசையில், பாற்கடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகவும், அன்று முன்னோர் வழிபாடு நடத்தினால், மகாலட்சுமி கடாட்ஷம் கிடைக்கும் என, நம்பப்படுகிறது.
அதனால், கார்த்திகை அமாவாசையான நேற்று (நவம்., 26ல்), சேலம், சுகவனேஸ்வரர் கோவில், மூக்கனேரி, அணைமேடு, குமரகிரி ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், முன்னோர்க்கு வழிபாடு நடத்தினர்.
குருக்கள் மூலம், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து, முன்னோர்க்கு எள், தண்ணீர் மூலம், தர்ப்பணம் கொடுத்தனர். பலரும் வீடுகளில் விரதமிருந்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அதேபோல், இடைப்பாடி அருகே, கல்வடங்கம், காவிரியாற்றில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர்.