மேட்டுப்பாளையம் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2297 days ago
புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி அன்று மாலை 6.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்து. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.