சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அர்த்தஜாம பூஜை
ADDED :2243 days ago
சிதம்பரம்: தில்லைக் காளியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி, நடந்த அர்த்தஜாம பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில், அமாவாசை அர்த்தஜாம அபிேஷக மண்டலி சார்பில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு அர்த்தஜாம பூஜை நடந்தது. இதையொட்டி, மகா அபிேஷகம், விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீப வழிபாடு, தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் தைலக் காப்பு ஆபிேஷகம், பால், தயிர், பழம், வாசனை திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டி வேர், விளாமிச்சை வேர், செவ்வரளி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்த்தஜாம பூஜை மற்றும் மகா தீபாராதனைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.