உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் உட்பகுதிகள் மற்றும் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையிட்டனர். கூடுதலாக 360 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவதாக, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !