உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் முதியவர்களுக்கு நேரடி தரிசனம்: அரசுக்கு பரிந்துரை

சபரிமலையில் முதியவர்களுக்கு நேரடி தரிசனம்: அரசுக்கு பரிந்துரை

சபரிமலை: சபரிமலையில், வரிசையில் நிற்காமல் முதியவர்கள் நேரடியாக தரிசனம் நடத்த வழி செய்ய அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரைத்துள்ளது.

சி.கே. நாணு எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டசபை குழு பம்பையில் ஆய்வு நடத்தியது. பம்பையில் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியது:  பம்பையில் பக்தர்கள் குளிக்க தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். பெண்கள் பம்பையில் குளித்து விட்டு உடைமாற்றம் செய்ய கூடுதல் வசதி செய்ய வேண்டும். பம்பை - சன்னிதானம் டோலி கட்டணம் ஒழுங்குபடுத்த வேண்டும். பம்பையில் பக்தர்கள் வீசுகின்ற துணிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சபரிமலை வரும் முதியவர்கள் வரிசையில் நிற்காமல் தரிசனம் செய்ய வசதி செய்ய வேண்டும். இந்த பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !