உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண 3 வழிகள்!

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண 3 வழிகள்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம் மே 2 காலை 9.17 மணி முதல் 9.41க்குள் நடக்கிறது. திருக்கல்யாணத்திற்கு வருவோரை வடக்கு, மேற்கு, தெற்கு கோபுரங்கள் வழியாக அனுமதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இக்கோயில் சித்திரைத் திருவிழா, ஏப்.,23ல் காலை 9.36 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகம், ஏப்.,30 இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மே 1ல் அம்மனின் திக்குவிஜயமும், மே 2ல் திருக்கல்யாணமும், மே 3ல் காலை 6 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. திருக்கல்யாணத்திற்காக சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. உள்ளூர் போலீசாருடன் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 800 போலீசார், 5 கம்பெனி போலீசார் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பில் ஈடுபடுவர். வி.ஐ.பி.,க்கள் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். வடக்கு கோபுரம் வழியாக 7000 பேரும், தெற்கு கோபுரம் வழியாக 6000 பேரும் அனுமதிக்கப்படுவர். ஆவணிமூலவீதிகள், மாசிவீதிகளில் கார், டூவீலர் பார்க்கிங் செய்யலாம். பாஸ் இல்லாதவர்கள் அம்மனையும், சுவாமியையும் மணக்கோலத்தில் தரிசிக்க கிழக்கு வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !