உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமி கோவிலில் அஷ்டபந்தன விழா

ஐயப்ப சுவாமி கோவிலில் அஷ்டபந்தன விழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஐயப்பன் சுவாமி கோவிலின், முதலாமாண்டை முன்னிட்டு, அஷ்டபந்தன விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியணஹள்ளியில், ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முதலாமாண்டு, அஷ்டபந்தன விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காலை, 6:00 மணிக்கு, ஐயப்பன் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, சபரிமலைக்கு மாலை அணிந்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !