உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கோவிலில் லட்சதீப தெப்பல் விழா!

விழுப்புரம் கோவிலில் லட்சதீப தெப்பல் விழா!

விழுப்புரம் : விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப விழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் திரு.வி. க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று விமான வீதியுலா நடந்தது. தொடர்ந்து சந்திரபிரபை, கோபிகாஸ்திரிகளுடன் பின்னக்கிளை, நாகவாகனம், நந்தன வருடப்பிறப்பு லட்சதீப கருடசேவை, இந்திர விமானம், முத்துப்பல்லக்கு, குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள அய்யனார்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் இரவு 12.30 மணியளவில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !