உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திரவுபதி அம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருத்தணி : திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 10 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மதியம் 1.30 முதல், மாலை 5.30 மணி வரை, சொற்பொழிவாளர் பாஸ்கரின் மகாபாரத விரிவுரையும் நடக்கும். வரும், 27ம் தேதி மதியம், சுபத்திரை திருக்கல்யாணம், மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும் இரவு புஷ்ப பல்லக்கு பவனி வருதல், 30ம் தேதி அர்ச்சுனன் தபசு, 3ம் தேதி கிருஷ்ணன் தூது, 6ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது. 7ம் தேதி தருமர் பட்டாபிஷேகமும், மூலவர் அம்மனுக்கு சந்தான காப்பும் நடக்கிறது. விழாவையொட்டி, நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சீரமைத்தது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுத் தலைவர் சரவணன் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !