போத்தனுார் தர்ம சாஸ்தா கோவிலில் தசாவதார அலங்காரம்
ADDED :2219 days ago
போத்தனுார்:குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில், மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் காட்சியளித்தார்.மகாவிஷ்ணு ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு அவதாரம் எடுத்து உலகை ரட்சித்தார். அந்நிகழ்வை போற்றும் வகையில், குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில், தனி சன்னதி கொண்டிருக்கும் மகா விஷ்ணு, நேற்று (டிசம்., 2ல்) முதல் அவதாரமான, மச்ச அவதாரத்தில் சந்தன காப்புடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (டிசம்., 4ல்) முதல் கூர்ம, வராக, நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி அவதாரத்தில் அருள்பாலிப்பார். வரும் 5 முதல் 12 வரை, தினமும் பாகவத பாராயணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.