உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

அவிநாசி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

அவிநாசி:சேவூர், கனடாங்குளம் புதூர் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், கருப்பராயன் கோவில், கும்பாபிஷேக விழா நடந்தது.கோவிலில், கடந்த, 29ம் தேதி விழா துவங்கியது. தினமும், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, (டிசம்., 3ல்)அதிகாலை, 4:00 மணிக்கு யாகசாலை பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.அதன்பின், தீபாராதனை, தசதரிசனம், தசதானம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, கோவை கருத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !