பழநி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்
ADDED :2151 days ago
பழநி, பழநி மலைக்கோயிலில் காப்புக்கட்டுதலுடன் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு நடந்தது. இதனையடுத்து மலைக்கோயிலில் சாயரட்சை பூஜை, சண்முகார்ச்சனை, தீபாராதனை நடந்தன. அதன்பிறகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விநாயகர், சண்முகருக்கும், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், மயில்வாகனம், நவவீரர்களுக்கும் காப்புக்கட்டி வழிபாடு செய்தனர். மாலை 7:30க்கு சுவாமி தங்கரதத்தில் உலா வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பஷே்கார் நரசிம்மன், கண்காணிப்பாளர் சக்கரசுந்தரேசன் பங்கேற்றனர்.