உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றம்

செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றம்

செஞ்சி : செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத் துடன் நேற்று (டிசம்., 8ல்) துவங்கியது.

செஞ்சி பீரங்கி மேடு அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நாளை நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு நேற்று (டிசம்., 8ல்)காலை ஏழு மணி க்கு அருணாச்சலேஸ்வரர் அபீதகுஜாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.8.30 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து விசேஷ ஹோமமும், தொடர்ந்து கொடிமரத்திற்கு விசேஷ அபிஷேகமும் நடந்தது. 9.20 மணிக்கு நந்திக் கொடி ஏற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.

இதில் அறங்காவலர் இந்திரா ரவிச்சந்திரன், விழாக்குழுவினர் ஏழுமலை, செல்வம், ரமேஷ், அண்ணாதுரை, ஆசிரியர் ராமமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (10ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !