உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதூரில் வனபோஜன உற்சவ விழா

ஸ்ரீபெரும்புதூரில் வனபோஜன உற்சவ விழா

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார், ஜீயர் தோட்டத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் நடந்த வனபோஜன உற்சவ விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று, ராமானுஜர், ஜீயர் தோட்டத்தில் உள்ள வனபோஜன மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு, ராமானு ஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கும்.மூன்று ஆண்டுகளாக, பேருந்து நிலையம் அருகே உள்ள, ஜீயர் தோட்டத்தில் வனபோஜன உற்சவ விழா நடைபெறாமல், கோவில் வளாகத்தி லேயே நடந்தது.

இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், நேற்று 13ம் தேதி ராமானுஜர், கோவிலிருந்து ஜீயர் தோட்டத்தில் உள்ள வனபோஜன மண்டப த்திற்கு எழுந்தருளினார்.அங்கு, ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !