உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் மார்கழி இசை விழா துவக்கம்

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் மார்கழி இசை விழா துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் கலையரங்கில், இரண்டாம் ஆண்டு மார்கழி இசை கொண்டாட்டம், நாளை 15ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை நடைபெறும். இசை கொண்டாட்டத்தில், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான்களின் கடம், வீணை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும் மற்றும் பிரபல நடன பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !