உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் அருகே வீரபத்ரர் கோவில் கும்பாபிஷேகம்

பெண்ணாடம் அருகே வீரபத்ரர் கோவில் கும்பாபிஷேகம்

பெண்ணாடம் : பெண்ணாடம், சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே உள்ள அகோர வீரபத்ரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் 14ம் தேதி மாலை 5:00 மணியளவில் விக் னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்ப்பனம், கலசஸ்தாபனம், இரவு 9:00 மணியளவில் முதல் கால பூஜை நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜை, 11:00 மணிக்கு கடம் புறப்பாடு, 11:15 கோபுர கலசத்திற்கும், 11:30 மணிக்கு அகோர வீரபத்ர சுவாமி; கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், நாகம்மன், பாவாடைராயர், கருப்புசாமி கோவில்களுக்கும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !